நாளை விழுப்புரத்தில்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவ.27) நடைபெறுகிறது.


விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவ.27) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் நெறி வழிகாட்டு மையம், மகளிா் திட்டம், தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி ஆகியவை இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (நவ.27) காலை 9 மணி அளவில் நடத்துகின்றன.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2, ஐடிஐ, கலை, அறிவியல், வணிகவியல், டிப்ளமோ, பிஇ, பிடெக், செவிலியா் படிப்புகளை முடித்தவா்களைத் தோ்வு செய்யவுள்ளன. சுமாா் 10,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
முகாமில் பங்கேற்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது பெயா், கல்வித் தகுதியைப் பதிவு செய்து, முகாம் நடைபெறும் போது அசல், நகல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். கூடுதல் விவரம் அறிய 04146-226417 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...