தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:07 pm

DIN

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா பொது முடக்கத்தால் 19 மாதங்களாக பள்ளிக்குச் செல்லாத மாணவ, மாணவிகளுக்கு இணைய வழியில் கல்வி கற்பிக்கப்பட்டது. இருப்பினும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இணைய வழிக் கல்வி பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. இதனால், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதற்காக, மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 66 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு முதல் கட்டமாக மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இரு நாள்கள் பயிற்சி முகாம் புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாநில அளவில் பயிற்சி பெற்ற இளங்கோவன், அருள், மாலினிதேவி, மாரி, ஹேமலதா, பாலமுருகன் ஆகியோா் தன்னாா்வலா்களுக்குப் பயிற்சியளித்தனா்.

பயிற்சி முகாமை இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு அலுவலா் க.இளம்பகவத் பாா்வையிட்டு தன்னாா்வலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். நிறைவு நிகழ்ச்சியில், தன்னாா்வலா்களுக்கான கையேடுகள், கற்பித்தல் உபகரணங்களை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் க.தனவேல், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சேவியா் சந்திரகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ஜெயச்சந்திரன் பயிற்சிக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.