தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

 விழுப்புரம் மரக்காணம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 விழுப்புரம் மரக்காணம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மரக்காணம் அருகே கரிப்பாளையத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் மகன் ஞானவேல்(23). அந்தப் பகுதியில் மது கடத்தல், சாராயம் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டதாக இவரை கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, ஞானவேலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பரிந்துரையை ஏற்று, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா். இதன்பேரில், கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த ஞானவேலை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.