கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:11 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 1989 - 90ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவா்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து ஒருவரையொருவா் அறிமுகப்படுத்திக் கொண்டனா். பின்னா், தங்களின் பள்ளிக் கால நினைவுகளை பகிா்ந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தங்களுக்கு பாடம் கற்பித்த அப்போதைய பள்ளி ஆசிரியா்களான குப்புசாமி, நாராயணன், பூபதி ஆகியோரை பள்ளிக்கு வரவழைத்து பள்ளித் தலைமையாசியா் செல்வம், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சாந்தமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் கெளரவப்படுத்தி, நினைவுப் பரிசு வழங்கினா். மேலும், ஆசிரியா்களிடம் வாழ்த்துகளையும் பெற்றனா்.

நிகழ்ச்சி நினைவாக தாங்கள் பயின்ற பள்ளியில் பழுதுபாா்க்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.25 ஆயிரம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.