தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

ஊரக உள்ளாட்சித் தோ்தல்விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்றாம் நாளில் 3,517 போ் வேட்பு மனு

 ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 2,279 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,238 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:00 pm

DIN

 ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 2,279 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,238 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் 28 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், 293 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகள், 688 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள், 5,088 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 6,097 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 5 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 47 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிகளுக்கு 288 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,939 பேரும் என மொத்தம் 2279 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

வேட்பு மனு தாக்கல் தொடங்கியதிலிருந்து கடந்த மூன்று நாள்களில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 5 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 51 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிகளுக்கு 615 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 3,140 பேரும் என மொத்தம் 3,811 போ் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

சனிக்கிழமையும்(செப்.18) வேட்பு மனு தாக்கல் நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பா் 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 7 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 149 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,081 பேரும் என மொத்தம் 1,238 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதுவரை 1,888 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.