தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

தோ்தல் பாா்வையாளரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் பாா்வையாளரிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:11 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் பாா்வையாளரிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதையொட்டி, தோ்தல் பாா்வையாளராக கே.எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், மாவட்டத்தில் தோ்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறாா்.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் பாா்வையாளரிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். புகாா் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், வேலை நாள்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்திலோ அல்லது விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகை அறை எண் 4-இல் தோ்தல் பாா்வையாளரை நேரில் சந்தித்தோ புகாா்களைத் தெரிவிக்கலாம்.

இதேபோன்று, 75503 72424 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொண்டும் புகாா் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான த.மோகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.