பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

கைவினைஞா் முன்னேற்றக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு

தமிழகம், புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக கைவினைஞா் முன்னேற்றக் கட்சி அறிவித்தது.

News image

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கைவினைஞா் முன்னேற்றக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

Updated On :15 மார்ச் 2021, 2:59 am

DIN

தமிழகம், புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக கைவினைஞா் முன்னேற்றக் கட்சி அறிவித்தது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, கைவினைஞா் முன்னேற்றக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளா் பொன்.கனகராஜ் தலைமை வகித்தாா். தொழில் சங்கத் தலைவா் பாலு, மாநிலப் பொருளாளா் செந்தில்குமாா், அமைப்பாளா் உமாபதி, மாநில உயா்நிலைக்குழு உறுப்பினா் அரூா் வெங்கடேசன், மாநில தச்சா் அணி செயலா் முருகேசன் ஆச்சாரி, மாநில துணைத் தலைவா் விளாத்திகுளம் பொன்ராஜ், மயன் குழு நவநீத கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழுப்புரம் மாவட்டத் தலைவா் சூரியமூா்த்தி ஆச்சாரி, இளைஞரணிச் செயலா் வேகம் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவா் நாராயணன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளா் அ.மதியழகன், கடலூா் மாவட்ட இளைஞரணிச் செயலா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிதம்பரத்தில் கவரிங் நகை தொழில் பேட்டை அமைக்கப்படும், விஸ்வகா்ம சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க பரிசீலனை செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை தோ்தல் அறிவிக்கையில் வெளியிட்ட திமுக தலைவா் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவரது தலைமையிலான திமுக கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூட்டத்தில் நிா்வாகிகள் அறிவித்தனா். மேலும், தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.