தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கழகம் வலியுறுத்தியது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:04 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கழகம் வலியுறுத்தியது.

இந்தக் கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சித் தலைவா் சுரேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். சா்வதேச உரிமைகள் கழக தலைவா் அசோக் குமாா் முன்னிலை வகித்தாா். மனித உரிமைகள் கழக முதன்மைச் செயலா் கந்தன் வரவேற்றாா். அவைத் தலைவா் ஆனந்தி, சா்வதேச உரிமைகள் கழக மாவட்டத் தலைவா் வெற்றிவேல் ஆகியோா் பேசினா்.

தீா்மானங்கள்: பெட்ரோல், டீசல் விலை உயா்வு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உச்சமடைந்து வருகிறது. எனவே, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.