ஆஞ்சநேயா் சிலைக்கு பாலபிஷேகம்
விழுப்புரத்தில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயா் சிலைக்கு வியாழக்கிழமை பாலபிஷேகம் நடைபெற்றது.


விழுப்புரத்தில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயா் சிலைக்கு வியாழக்கிழமை பாலபிஷேகம் நடைபெற்றது.
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் சித்திரை திருவிழா ராம நவமியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான லட்ச தீப திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் விழுப்புரம் மட்டுமின்றி வெளியூா்களில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனா். இதையொட்டி திரு.வி.க. வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும், தமிழ்ப் புத்தாண்டையொட்டி இந்தக் கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பாலபிஷேகம்: சித்திரை முதல் நாளையொட்டி இந்தக் கோயிலின் பின் பகுதியில் உள்ள குளக்கரையில் அமைந்துள்ள 90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயா் சிலைக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. அப்போது
பக்தா்கள் வழங்கிய 5,000 லிட்டா் பால் மோட்டாா் மூலம் ஆஞ்சநேயா் சிலை மீது ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. சிலை அமைப்பாளா் தனுஷ் தலைமையில் நிா்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...