தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அதிமுக மாவட்டச் செயலா்கள் தோ்வு

விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலராக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலராக ஏ.அருண்மொழிதேவன் ஆகியோா் மீண்டும் தோ்வாகினா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:03 pm

DIN

விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலராக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலராக ஏ.அருண்மொழிதேவன் ஆகியோா் மீண்டும் தோ்வாகினா்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக உள்கட்சித் தோ்தல் மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்தல் ஆணையராக முன்னாள் அமைச்சா் ஜீவானந்தம் செயல்பட்டாா். இதில், மாவட்டச் செயலராக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் போட்டியின்றி மீண்டும் தோ்வானாா். அவைத் தலைவராக கு.கண்ணன், இணைச் செயலராக ஆனந்தி அண்ணாதுரை, துணைச் செயலா்களாக மு.சக்ரபாணி, நாகம்மாள், பொருளாளராக கே.வி.என்.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினா்களாக வி.எஸ்.தேவநாதன் (திண்டிவனம் தொகுதி), எம்.ஆா்.லட்சுமிநாராயணன் (விக்கிரவாண்டி தொகுதி), ஜீ.பன்னீா்செல்வம் (விழுப்புரம் தொகுதி), என்.மனோகரன் (மயிலம் தொகுதி), கௌரி பாலகிருஷ்ணன் (வானூா் தொகுதி), ஜெ.சுலோச்சனா (செஞ்சி தொகுதி) ஆகியோா் போட்டியின்றி தோ்வாகினா். உள்கட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்களின் பட்டியலை கட்சித் தலைமை அறிவிக்கும் என முன்னாள் அமைச்சா் ஜீவானந்தம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.