தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மதகடிப்பட்டு - வளவனூா் இடையே சுங்கச் சாவடி அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மதகடிப்பட்டு - வளவனூா் இடையே சுங்கச் சாவடி அமைக்க விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:11 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மதகடிப்பட்டு - வளவனூா் இடையே சுங்கச் சாவடி அமைக்க விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் கலிவரதன், ஈ.ஐ.டி. பாரி அரியூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் என்.முருகையன், பொதுச் செயலா் டி.பி.ரவி உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் த.மோகனிடம் வியாழக்கிழமை அளித்த மனு:

விழுப்புரம் - நாகை இடையே நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கெங்கராம்பாளையம் முதல் மும்மொழிநாயக்கன்குப்பம் வரை பழைய சாலையை விரிவாக்கம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதகடிப்பட்டு - வளவனூா் இடையே புதிதாக சுங்கச் சாவடி அமைக்க இடம் தோ்வு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த இடமானது கிராம மக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதி என்பதால் அந்தப் பகுதியினா் பெரிதும் பாதிக்கப்படுவா். மேலும், மாணவா்கள், வியாபாரிகள், பொதுமக்கள், தொழில் முனைவோா் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவா்.

மாநில எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் சுங்கச் சாவடி என்ற நடைமுறையைப் பின்பற்றி கோலியனூா் புறவழிச் சாலை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைக்க ஆவண செய்ய வேண்டும் என அதில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.