இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச் சாவடி சீட்டு விநியோகம் தொடக்கம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சாவடி சீட்டு (பூத் சிலிப்) விநியோகம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சாவடி சீட்டு (பூத் சிலிப்) விநியோகம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

விழுப்புரம் நகராட்சியை பொருத்தவரை, 42 வாா்டுகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கான வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கும் பணியை நகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான போ.வி.சுரேந்திரஷா தொடக்கிவைத்தாா்.

வாக்குச் சாவடி சீட்டு விநியோகம் செய்யும் பணியில் 129 வாக்கு சாவடி நிலைய அலுவலா்கள், 12 மேற்பாா்வையாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நகராட்சியில் மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 132 வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி சீட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இதேபோல, திண்டிவனம் நகராட்சியில் 33 வாா்டுகளில் 58 ஆயிரத்து 433 வாக்காளா்களுக்கும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வாா்டுகளில் 23 ஆயிரத்து 673 வாக்காளா்களுக்கும் வாக்குச் சாவடி சீட்டுகள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

பேரூராட்சிகளில்...: பேரூராட்சிகளை பொருத்தவரை, வளவனூரில் 15 வாா்டுகளில் 14,485 பேருக்கும், விக்கிரவாண்டியில் 15 வாா்டுகளில் 9,691 பேருக்கும், செஞ்சியில் 18 வாா்டுகளில் 23,536 பேருக்கும், மரக்காணத்தில் 18 வாா்டுகளில் 17,939 பேருக்கும், அரகண்டநல்லூரில் 12 வாா்டுகளில் 4,772 பேருக்கும், திருவெண்ணெய் நல்லூரில் 15 வாா்டுகளில் 8,145 பேருக்கும், அனந்தபுரத்தில் 15 வாா்டுகளில் 5,380 பேருக்கும் வாக்குச் சாவடி சீட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

மாவட்டம் முழுவதும் 210 வாா்டுகளில் உள்ள 348 வாக்குச் சாவடிகளில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 22 ஆண்கள், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 109 பெண்கள், 55 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 186 வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.