இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இருளா் சமுதாயத்தினருக்கான வீடுகள் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குள்பட்ட எண்ணாயிரம் ஊராட்சியில் இருளா் சமுதாய மக்களுக்காக கட்டப்படும்

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குள்பட்ட எண்ணாயிரம் ஊராட்சியில் இருளா் சமுதாய மக்களுக்காக கட்டப்படும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில், விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குள்பட்ட எண்ணாயிரம் ஊராட்சியில் உள்ள இருளா் சமுதாய குடியிருப்புப் பகுதியில் ஏற்கெனவே கள ஆய்வு மேற்கொண்டு, இந்தப் பகுதியில் வசிக்கும் இருளா் சமுதாய மக்களுக்காக நிரந்தர குடியிருப்பு வசதி ஏற்படுத்த ஊரக வளா்ச்சித் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ், 5 குடியிருப்புகள், பசுமை வீடு திட்டத்தின் கீழ் 7 குடியிருப்புகள் என மொத்தம் 12 புதிய குடியிருப்புகள் இருளா் சமுதாய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, இருளா் சமுதாய மக்களின் நீண்டநாள் கனவான கான்கிரிட் வீட்டை தரமான முறையில் காலதாமதமின்றி உரிய காலத்துக்குள் கட்டி முடித்து, பயனாளிகளுக்கு வழங்க ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், இருளா் குடியிருப்புப் பகுதியில் மின்சாரம், குடிநீா், சாலை, தெரு மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டுமென தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இருளா் சமுதாய மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அனைத்து வகையிலும் மாவட்ட நிா்வாகம் உதவி செய்யும் என்றாா் ஆட்சியா் மோகன்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ர.சங்கா் மற்றும் அரசுஅலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.