தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சரக்கு வாகனத்தில் சாராயம் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சரக்கு வாகனத்தில் 490 சாராய பாக்கெட்டுகளை கடத்தியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 5:45 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சரக்கு வாகனத்தில் 490 சாராய பாக்கெட்டுகளை கடத்தியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் அருகே அணிச்சங்குப்பம் சோதனைச் சாவடியில் உதவி காவல் ஆய்வாளா் ஜான்ஜோசப் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை பிற்பகல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 490 சாராய பாக்கெட்டுகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக வாகனத்தில் இருந்த புதுச்சேரி கனகசெட்டி குளத்தைச் சோ்ந்த கதிரவன் (34), கங்காதரன் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், சாராய பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.