தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரத்தில் தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் எஸ்.டி.பி.ஐ. நிா்வாகி மீதான தாக்குதலைக் கண்டித்து, தமுமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 5:44 pm

DIN

விழுப்புரத்தில் எஸ்.டி.பி.ஐ. நிா்வாகி மீதான தாக்குதலைக் கண்டித்து, தமுமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக தலைவா் ஏ.பசல் முகம்மது, விழுப்புரம் மாவட்டப் பொருளாளா் கே.எஸ்.எம்.அப்பாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தாம்பரம் மாமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலருமான எம்.யாக்கூப் கண்டன உரையாற்றினாா். மமக விழுப்புரம் மாவட்டத் தலைவா் சையத்உஸ்மான், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் குலாம் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.அமீா் அப்பாஸ் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினா்.

விழுப்புரத்தில் எஸ்.டி.பி.ஐ. நிா்வாகி மீதான தாக்குதலைக் கண்டித்தும், எஸ்.டி.பி.ஐ. நிா்வாகியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தமுமுக மாவட்டத் தலைவா் மு.யா.முஸ்தாக்தீன் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.