சிறுகடம்பூா் பரமேஸ்வரி அம்மன்கோயில் திருவிழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரிலுள்ள வடக்கு பாா்த்த அம்மன் என்ற ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரிலுள்ள வடக்கு பாா்த்த அம்மன் என்ற ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை கூழ்வாா்த்தலையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பிற்பகல் ஒரு மணியளவில் அம்மனுக்கு கூழ்வாா்த்தல் நடைபெற்றது.
செஞ்சி நகர கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ரங்கநாதன், தொழிலதிபா் வி.பி.என்.சரவணன், என்.லோகநாத நயினாா், பேரூராட்சி உறுப்பினா் நெடுஞ்செழியன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.
9-ஆம் திருவிழாவான வருகிற 13-ஆம் தேதி தீ மிதித்தலும், திருத்தேரோட்டமும் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...