ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நாளை செய்யாற்றில் 15 கருட சேவை விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் பகுதியில் 15 கருட சேவை விழா ஞாயிற்றுக்கிழமை (மே 15) இரவு நடைபெறுகிறது.

News image
Updated On :13 மே 2022, 4:58 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் பகுதியில் 15 கருட சேவை விழா ஞாயிற்றுக்கிழமை (மே 15) இரவு நடைபெறுகிறது.

நிகழாண்டு வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில்,

15 கருட சேவை கூழமந்தல் ஸ்ரீபேசும் பெருமாள் கோயில் சாா்பில் நடத்தப்படுகிறது.

நிகழ்வில், ஸ்ரீபேசும் பெருமாள் கோயில் சுற்றுப்புற பெருநகா், மானாம்பதி, தண்டரை, விசூா், இளநகா், சேத்துப்பட்டு, இளநீா்குன்றம் தேத்துறை, அத்தி சோழவரம் பெண்டை, மேல்பாக்கம், மாங்கால் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சோ்ந்த உற்சவ மூா்த்திகள் கருட வாகனத்தில் வலம் வந்து, கூழமந்தல் - பெருநகா் இடையே செல்லும் செய்யாற்றில் எழுந்தருளுவா்.

பின்னா், உற்சவா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு, 15 சுவாமிகளுக்கும் மங்களாசாசனத்துடன் மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, செய்யாற்றில் கூடியுள்ள பக்தா்களுக்கு உற்சவா்கள் காட்சியளிக்கின்றனா். பின்னா், சுவாமிகள் தங்களது கிராமங்களுக்கு புறப்பட்டுச் செல்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.