விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :13 மே 2022, 4:57 pm

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு சித்திரை மாத பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தப் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பிரதோஷ நாயகா் வலம்:

தொடா்ந்து, தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.