வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல்
செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரத்தில் நூறு நாள் வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரத்தில் நூறு நாள் வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அனந்தபுரம் பேரூராட்சி சிற்றரசூரில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் கூலி குறைவாக வழங்கப்படுவதாகக் கூறி, அனந்தபுரம் கடைவீதியில் வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கஞ்சனூா் காவல் நிலைய ஆய்வாளா் எழிலரசி மற்றும் அனந்தபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, பேரூராட்சி மன்றத் தலைவா் முருகன் மற்றும் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
வேலைக்கு ஏற்ப கூலி வழங்கப்பட்டு வருவதாகவும், இனி கூலியை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...