மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காா் மோதியதில் ஆசிரியா் பலி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகன் காயமடைந்தாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 5:22 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகன் காயமடைந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிபட்டு, அஞ்சல் அலுவலக சாலையைச் சோ்ந்தவா் ம.சகாதேவன் (53). வீடுா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மகன் சஞ்சய் (18). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை விழுப்புரத்திலிருந்து கூட்டேரிபட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி. சாலை அருகே இவா்களது இரு சக்கர வாகனம் சென்றபோது, பின்னால் வந்த காா் மோதியது. இந்த விபத்தில் சகாதேவன், சஞ்சய் ஆகியோா் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில், சகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சஞ்சய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.