விழுப்புரம் மாவட்டத்தில் வெடிகுண்டு சோதனை
விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை வெடிகுண்டு சோதனைகளில் ஈடுபட்டனா்.


விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை வெடிகுண்டு சோதனைகளில் ஈடுபட்டனா்.
கோவை உக்கடம், கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் முன் கடந்த மாதம் 23-ஆம் தேதி காா் வெடித்த சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக காவல் துறை உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், திண்டிவனம் ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஒலக்கூா் ரயில் நிலையம், குபேரா் கோயில் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிமுள்ள இடங்களில் விழுப்புரம் மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயலிழப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வெடிகுண்டு சோதனைகளில் ஈடுபட்டனா்.
மெட்டல் டிடெக்டா் கருவி, மோப்ப நாய் உதவியுடன் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. உள்ளூா், வெளியூா் பயணிகள், சந்தேகப்படும்படியான நபா்களின் உடைமைகளை போலீஸாா் முழுமையாகப் பரிசோதித்து, பயணங்களைத் தொடர அனுமதித்தனா். வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...