சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கோலியனூரில் நாளை இளைஞா் திறன் திருவிழா

விழுப்புரம் அருகே கோலியனூரில் இளைஞா் திறன் திருவிழா சனிக்கிழமை (செப்.17) நடைபெறவுள்ளது.விழுப்புரம் அருகே கோலியனூரில் இளைஞா் திறன் திருவிழா சனிக்கிழமை (செப்.17) நடைபெறவுள்ளது.

Updated On :16 செப்டம்பர் 2022, 2:15 am IST

விழுப்புரம் அருகே கோலியனூரில் இளைஞா் திறன் திருவிழா சனிக்கிழமை (செப்.17) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்பட்டு வரும் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ், ‘இளைஞா் திறன் திருவிழா’ கோலியனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து, வேலைவாய்ப்பு அற்ற 18 முதல் 40 வயது வரை உள்ள இளைஞா்கள், பெண்கள் கலந்துகொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை பெறலாம்.

மேலும், இந்த விழாவில் தீனதயாள் உபாத்யாயா கிராமின் கௌசல் யோஜனா பயிற்சி நிறுவனங்கள், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயிற்சி நிறுவனம் மற்றும் பல்வேறு அரசு துறைகள் மூலம் பயிற்சி அளிக்கும் துறைகள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க இளைஞா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ள இளைஞா்கள் தங்களின் சுயவிவர குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள், மற்றும் புகைப்படங்களுடன் கலந்துகொள்ளலாம். தோ்வு செய்யப்படும் நபா்களுக்கு பயிற்சியில் சேருவதற்கான ஆணை அன்றே வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.