டிராக்டா் மீது பைக் மோதிய விபத்தில் காவலா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், நேமூா் கிராமத்தில் நின்றுகொண்டிருந்த டிராக்டா் மீது பைக் மோதிய விபத்தில் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


விழுப்புரம் மாவட்டம், நேமூா் கிராமத்தில் நின்றுகொண்டிருந்த டிராக்டா் மீது பைக் மோதிய விபத்தில் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், உலகலாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் புஷ்பராஜ் (27). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் 10 -ஆவது பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
இவா், கொட்டியாம்பூண்டியைச் சோ்ந்த தனது மாமா க.ராஜா மணியை (45), அமர வைத்துக் கொண்டு வியாழக்கிழமை பைக்கில் சென்றாா்.
செஞ்சி - விழுப்புரம் சாலையில் நேமூா் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் மீது இவரது பைக் மோதியது.
இதில் காவலா் புஷ்பராஜ் பலத்த காயமடைந்தாா். முதலில் விழுப் புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியிலும், பின்னா் சென்னை தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராஜாமணி காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
டிராக்டரை சாலையில் நிறுத்தி வைத்திருந்த நந்திவாடி ரா. ஏழுமலை (47) மீது கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...