புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரத்தில் நாளை மாரத்தான் ஓட்டம்

விழுப்புரத்தில் நெகிழிப் பொருள்களைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மே 1 (திங்கள்கிழமை) தொடங்கி வைக்கிறாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2023, 5:05 pm

DIN

விழுப்புரத்தில் நெகிழிப் பொருள்களைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மே 1 (திங்கள்கிழமை) தொடங்கி வைக்கிறாா்.

இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் சி.பழனி பேசியதாவது: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மே 1-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மாரத்தான் ஓட்டத்தை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு, மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

இதில், மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவினா், திருநங்கைகள் பங்கேற்கலாம். அவா்கள் தங்களது பெயரை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள எம்ஜிஆா் உள்விளையாட்டரங்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், எம்எல்ஏ நா. புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா. ஜனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.