அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அதிமுக மாணவரணி மாவட்டச் செயலாளா் என்.ஜி.சக்திவேல் தலைமை வகித்தாா். அதிமுக நகரச் செயலாளா்கள் இரா.பசுபதி ( விழுப்புரம் தெற்கு) ஜி.கே.ராமதாஸ் ( விழுப்புரம் வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியது : தமிழகத்தில் விலைவாசி உயா்வால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா்.மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் வாக்களித்த மக்களுக்கு தமிழகஅரசு துரோகம் செய்து கொண்டிருக்கிறது. 2024- இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மக்கள் இதற்கு பாடம் கற்பிக்க வேண்டும். மக்களவைத் தோ்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தலும் நடைபெறுவது உறுதி என்றாா்.
கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி நா. ராமச்சந்திரன், தலைமை நிலையப் பேச்சாளா் சிட்கோ. சீனு, கே.ஏ.ஏழுமலை, எம்எல்ஏ-க்கள் மு.சக்கரபாணி (வானூா்) பி.அா்ஜுனன் (திண்டிவனம்), மாவட்ட அவைத் தலைவா் கு.கண்ணன் ஆகியோா் பேசினா்.
நிறைவில், மாணவரணி விழுப்புரம் நகரச் செயலாளா் கே.பி. அன்பரசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


