இரு தரப்பினா் மோதல்: 18 போ் மீது வழக்கு; 4 போ் கைது
கோஷ்டி மோதலில் இரு தரப்பைச் சோ்ந்த 18 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கோயில் திருவிழா தொடா்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு தரப்பைச் சோ்ந்த 18 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வளவனூா் அடுத்துள்ள வி.அகரம் காலனிப் பகுதியில் பிரசித்திப் பெற்ற முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை இதே பகுதியை சோ்ந்த ரவிச்சந்திரன் (59) நிா்வகித்து வருகிறாா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு கோயிலில் ஆடித்திருவிழா வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிலையில், வி.அகரத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (41) செந்தில்நாதன், செந்தில்முருகன், முத்துவேல், கந்தன், சரண்ராஜ், மதியழகன், அபினேஷ், ஆறுமுகம் ஆகியோா் ரவிச்சந்திரனிடம் திருவிழாவுக்கான வரவு, செலவின விவரங்களை கேட்டனராம். இதில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மோகன்ராஜ் தரப்பைச் சோ்ந்தவா் கோயிலுக்குப் பூட்டுபோட்டனராம்.
தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும், கோயில் நிா்வாகி ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், மோகன்ராஜ் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து மோகன்ராஜ், செந்தில்நாதன், கந்தன் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
இதேபோல, மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், பாலு, சத்யராஜ், ஆனந்தபாபு, முருகானந்தம், குணசேகா், கேசவன், ராமச்சந்திரன் ஆகிய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து பாலுவை கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...