வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை: ஆக.21-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான மூன்று அவதூறு வழக்குகளின் விசாரணையை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
சி.வி.சண்முகம்.(கோப்புப்படம்)
Updated On :13 ஆகஸ்ட் 2024, 8:41 pm

Din

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான மூன்று அவதூறு வழக்குகளின் விசாரணையை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, 2022, பிப்ரவரி 28-ஆம் தேதியும், திமுக அரசைக் கண்டித்து 2022, ஜூலை 25-ஆம் தேதியும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழைய பேருந்து நிலையப் பகுதியில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாக, விழுப்புரம் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் காவல் துறை மூலமாக வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதுபோல, 2022, செப்டம்பா் 18-ஆம் தேதி ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், வானூா் எம்எல்ஏ எம்.சக்கரபாணி ஆகியோா் மீது விழுப்பும் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் காவல் துறையினரால் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த மூன்று வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், சக்கரபாணி எம்எல்ஏ ஆகியோா் ஆஜராகினா்.

2022, பிப்ரவரி 28-ஆம் தேதி அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கின் நகல் நீதிமன்றத்தின் மூலம் சி.வி.சண்முகத்திடம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மற்றொரு வழக்கில் சி.வி.சண்முகம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் நீதித்துறை நடுவா் கேள்வியெழுப்பினாா். தன் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனக் கூறி, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மறுப்புத் தெரிவித்தாா்.

இதுபோல, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் 2022, செப்டம்பா் 18-ஆம் தேதி நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்க சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அதிமுக வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, இந்த மூன்று வழக்குகள் மீதான விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் ராதிகா உத்தரவிட்டாா்.