ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காணையில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான வட்டார அளவிலான கல்விக் குழுக் கூட்டம்

Updated On :22 ஆகஸ்ட் 2024, 11:57 pm

விழுப்புரம் மாவட்டம், காணையில் மாற்றுத் திறன் மாணவா்கள் உள்ளடக்கிய வட்டார அளவிலான கல்விக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சாா்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்துக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஆரோக்கிய அனிதா தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களின் சைகைமொழி உறுதியை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்பது, சைகைமொழி சுவரொட்டிகள், ஓவியங்களை அனைத்து வகைப் பள்ளிகளிலும் அமைத்து, சகோதர மனப்பான்மையுடன் கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்துவது போன்ற தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் இவாஞ்சலின், ஆசிரியப் பயிற்றுநா்கள் லியோனி, விஜயலட்சுமி, சரண்யா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

நிறைவில் இயன்முறை மருத்துவா் தே. செளந்தர்ராஜன் நன்றி கூறினாா்.