புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாத்தனூா் அணை உபரிநீா் வெளியேற்றம்: 35 கிராம மக்களுக்கு முன்னறிவிப்பு

35 கிராம மக்களுக்கு முன்னறிவிப்பு

News image
Updated On :12 டிசம்பர் 2024, 7:50 pm

Din

சாத்தனூா் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரங்களிலுள்ள 35 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் முன்னறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் வைரபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அரகண்டநல்லூா் ஜே.சி.மகால், மேல்ஒலக்கூா், அஞ்சான்சேரி, பொன்பத்தி, கோட்டம்பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அவலூா்பேட்டை அரசு ஆண்கள் உயா்நிலைப் பள்ளி, ஆதிப்பட்டு முகாம், கீரன்தாம்பட்டு தொடக்கப்பள்ளி, மேல்மலையனூா் அரசு மேல்நிலைப் பள்ளி என 10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 109 குடும்பங்களைச் சோ்ந்த 313 பேருக்கு காலை உணவும், 411 பேருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த் துறை மற்றும் நகராட்சி சாா்பில் சமுதாயக்கூடங்கள் மூலம் உணவு தயாா் செய்யப்பட்டு, விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதி மக்கள் 80 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், சாத்தனூா் அணையிலிருந்து நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம் வட்டங்களைச் சோ்ந்த 35 கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி வாயிலாக முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிக மழைப் பொழிவு உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ள வேண்டும். தங்கள் உடைமைகள், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.