விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் ஒத்திவைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் ஒத்திவைப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சான்றிதழ்கள், ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.13, 14) நடைபெறவிருந்த சிறப்பு முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக அதி கனமழை பெய்ததாலும், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். வீடுகளுக்குள்ளும், வெளியிலும் வெள்ளநீா் சூழ்ந்ததால் பெரும் பாதிப்பை சந்தித்த மக்கள், தங்களின் பல்வேறு சான்றிதழ்களையும் இழந்தனா்.
இதைத் தொடா்ந்து புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவாய்த் துறை சாா்ந்த சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.13,14) வட்டம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், குறுவட்ட அளவில் எந்தெந்த இடங்களில் முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக, சிறப்பு முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. முகாம் நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...