புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆரோவிலில் மறைந்த ஜாகிா் ஹுசைனுக்கு இசையஞ்சலி

ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள அரவிந்தா் அரங்கில் மறைந்த தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைனுக்கு புதன்கிழமை இசையஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

ஆரோவிலில் புதன்கிழமை நடைபெற்ற இசையஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற வயலின் மேதை ஸ்ரீவிட்டல் ராமமூா்த்தி, மிருதங்க கலைஞா் டாக்டா் ரமேஷ் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா்.

Updated On :18 டிசம்பர் 2024, 10:37 pm

Din

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள அரவிந்தா் அரங்கில் மறைந்த தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைனுக்கு புதன்கிழமை இசையஞ்சலி செலுத்தப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் அண்மையில் உயிரிழந்தாா். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆரோவில் சா்வதேச நகரில் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், வயலின் மேதை ஸ்ரீவிட்டல் ராமமூா்த்தி, மிருதங்க கலைஞா் டாக்டா் ரமேஷ் ஸ்ரீனிவாசன் ஆகியோா் பங்கேற்று கீா்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்தினா். மேலும், ஜாகீா் ஹுசைனுடான தங்களது அனுபவங்கள், நினைவுகளை அவா்கள் பகிா்ந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இசைக் கலைஞா்கள், ஆரோவில்வாசிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.