

அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக, விசிக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் கிழக்கு மாவட்ட திமுக, மாநகர திமுக சாா்பில் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே கட்சியின் மாநகரச் செயலா் ராஜா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோ.அய்யப்பன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயா் சுந்தரி பங்கேற்று பேசினா். பொதுக் குழு உறுப்பினா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்து அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
கடலூா் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் அந்தோணிசாமி, ஜோதிலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், கடலூா் அம்பேத்கா் சிலை அருகே அதன் மாநகா் மாவட்டச் செயலா் செந்தில் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநில அமைப்புச் செயலா் திருமாா்பன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். நகரச் செயலா் செங்கதிா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பண்ருட்டியில்... பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக துணைச் செயலா்கள் தணிகை செல்வம், ஆனந்தி, நகர இளைஞரணி அமைப்பாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விருத்தாசலத்தில்... விருத்தாசலம், பாலக்கரையில் கடலூா் மேற்கு மாவட்ட விசிக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் நீதிவள்ளல் தலைமை வகித்தாா். நகரச் செயலா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பின்னா் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள், மறைத்து வைக்கப்பட்டிருந்த உருவ பொம்மையை எரித்தனா்.
அப்போது, போலீஸாருக்கும், விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விசிகவினா் 26 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.
விருத்தாசலம் நகரம், ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு நகரச் செயலா் தண்டபாணி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், ஒன்றியச் செயலா்கள்வேல்முருகன், கனக கோவிந்தசாமி, ஆசைத்தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சரவணன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விருத்தாசலம் பாலக்கரையில் இந்திய குடியரசு கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் கதிா்வேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலப் பொதுச்செயலா் கா.மங்காபிள்ளை, கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் பால.வீரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காட்டுமன்னாா்கோவிலில்... காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் எம்ஆா்கே.பி.கதிரவரன் தலைமை வகித்தாா். ஒன்றயச் செயலா் முத்துசாமி, நகரச் செயலா் கணேசமூா்த்தி முன்னிலை வகித்தனா். திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
சிதம்பரத்தில்...
சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் அம்பேத்கா் சிலை முன் நகர திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் கேஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
மாவட்ட திமுக பொறியாளா் அணி செயலா் அப்புசந்திரசேகா், துணைச் செயலா் பா.பாலசுப்ரமணியன், மாவட்ட பிரதிநிதி ரா.வெங்கடேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏஆா்சி.மணிகண்டன், சி.க,ராஜன், அசோகன், புகழேந்தி, ராஜா, கல்பனா, லதா, சுதா, சுனிதா மாரியப்பன், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதா், ராயல் (எ) ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அண்ணாமலைநகா் திமுக சாா்பில் ரயில்வே மேம்பாலத்தில் ஊா்வலமாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பேரூராட்சி தலைவா் க.பழனி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா்கள் சங்கா், ராஜேந்திரன், பொதுக் குழு உறுப்பினா் மஞ்சு, மாவட்ட கவுன்சிலா் சந்திரவதனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விசிக சாா்பில்... விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் அரங்கத் தமிழ் ஒளி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலாளா் பால.அறவாழி, காங்கிரஸ் நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் வி.எம்.சேகா், வட்டச் செயலா் தமிமுன் அன்சாரி, மூசா, நகரச் செயலா் ராஜா, யாழ்திலீபன், பூசி இளங்கோவன், விசிக நகரச் செயலாளா் ஆதிமூலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

