புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவத்தில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:33 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவத்தில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

வானூா் வட்டம், எறையூா், அங்கன்வாடி தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவரது மனைவி சந்திரலேகா(27). இவா்களுக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், மகள் உள்ளனா். இந்நிலையில் ராஜசேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்படுமாம்.

இதனால் மன உளச்சலில் இருந்து வந்த சந்திரலேகா கடந்த 16 ஆம் தேதி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சந்திரலேகா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞா் தற்கொலை: விழுப்புரம் வட்டம், கொளத்தூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனி மகன் புருஷோத்தமன்(22). டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளாா். இவரது தாய் செல்வநாயகி உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தாா்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த புருஷோத்தமன் புதன்கிழமை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.