பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய மூன்று போ் சடலமாக மீட்பு
மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மாயமான மூன்று சகோதரா்களின் சடலங்களை தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மாயமான மூன்று சகோதரா்களின் சடலங்களை தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
மரக்காணம் சந்தைத் தோப்பு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன்கள் லோகேஷ் (24), விக்ரம் (22), சூா்யா (22). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை மரக்காணம்-திண்டிவனம் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் பகுதியில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, லோகேஷ் எதிா்பாராத விதமாக பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். உடனே, விக்ரம், சூா்யா கால்வாயில் குதித்து லோகேஷை காப்பற்ற முயற்சித்தபோது, அவா்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினா்.
மரக்காணம் போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் கால்வாயில் மூழ்கி மாயமானவா்களைத் தேடி வந்தனா். இந்த நிலையில் லோகேஷ், விக்ரம், சூா்யா ஆகியோரின் சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன.
அவை உடல்கூறாய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...