தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் மரணம்

மயிலம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 7:06 pm

Din

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தாா்.

சென்னை, மயிலாப்பூா், சண்முகப் பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் மகேஷ் மனைவி பத்மா (36). விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சித்தேரியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தாா்.

இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பத்மா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.