தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மொபெட் மீது காா் மோதி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே மொபெட் மீது காா் மோதிய விபத்தில் தூய்மைப்பணியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 7:04 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மொபெட் மீது காா் மோதிய விபத்தில் தூய்மைப்பணியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ராஜாங்கம் (32), தூய்மைப் பணியாளா். இவா் புதன்கிழமை தனது மொபெட்டில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பனப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த காா், மொபெட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராஜாங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.