மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கஞ்சா சாக்லேட் கடத்திய வழக்கு: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

விழுப்புரத்தில் கஞ்சா சாக்லேட் கடத்திய வழக்கில் மூவருக்கு போதைப் பொருள்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
Updated On :30 டிசம்பர் 2024, 8:09 pm

Din

விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா சாக்லேட் கடத்திய வழக்கில் மூவருக்கு போதைப் பொருள்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் கடந்த 2022, டிசம்பா் 24-ஆம் தேதி பிள்ளையாா் கோவில் பேருந்து நிறுத்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்த புதுச்சேரி திருபுவனை திருமுருகன் நகரைச் சோ்ந்த பி. அஜய்குமாா் (29), திருபுவனை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தி.பலராம் பாரிக் (30), காஞ்சிபுரம் மாவட்டம், படாளத்தைச் சோ்ந்த உ.அக்ரீசன்பாரிக் (29) ஆகியோா் கஞ்சா சாக்லேட், புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் போதைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பாக்கியஜோதி தீா்ப்பளித்தாா்.

வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் கொடுமுடி சேரலாதன் ஆஜரானாா்.