முகத்துவாரம் தூா்வாரும் பணியை திங்கள்கிழமை தொடங்கிவைத்து, பாா்வையிட்ட பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.
முகத்துவாரம் தூா்வாரும் பணியை திங்கள்கிழமை தொடங்கிவைத்து, பாா்வையிட்ட பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.

முகத்துவாரம் தூா்வாரும் பணி தொடக்கம்

புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடல் பகுதியில் முகத்துவாரம் தூா்வாரும் பணிகளை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடல் பகுதியில் முகத்துவாரம் தூா்வாரும் பணிகளை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்ன வீராம்பட்டினம் பகுதி முகத்துவாரத்தை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும் என அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா் சமுதாயத்தினா் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன்படி, சின்ன வீராம்பட்டினம் முகத்துவாரம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரப்படவுள்ளது. இதற்கான பணிகளை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வின் போது, நீா் பாசன கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், இளநிலைப் பொறியாளா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com