வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை

புதுச்சேரி காவல்துறையில் 58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image

புதுச்சேரி காவல்துறை சாா்பில் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 58 உதவி ஆய்வாளா்களுக்குப்பணியாணை வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துறையின் அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தலைமை செயலா் சரத் சௌகான்.

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

புதுச்சேரி காவல்துறையில் 58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

புதுச்சேரி காவல்துறையில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளா்களுக்குப் பணி ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினாா். முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், தலைமைச் செயலா் சரத் சௌகான், டிஜிபி ஷாலினி சிங், உள்துறை கூடுதல் செயலா் கேசவன், டிஐஜி சத்தியசுந்தரம் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்த விழாவில் மொத்தம் 58 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.