தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வீடு கட்ட ரூ.90 லட்சம் நிதியாணை: புதுச்சேரி பேரவைத் தலைவா் வழங்கினாா்

மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் கல்வீடு கட்ட 92 பேருக்கு ரூ. 90.90 லட்சம் நிதிக்கான அரசாணைகளை

News image

புதுச்சேரி பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

Updated On :9 மார்ச் 2026, 9:01 pm

புதுச்சேரி: மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் கல்வீடு கட்ட 92 பேருக்கு ரூ. 90.90 லட்சம் நிதிக்கான அரசாணைகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒருங்கிணைந்த பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு வீட்டுவசதி திட்டம் மற்றும் பிரதம மந்திரி கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவிக்கான அரசாணை வழங்கப்பட்டது.

74 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 74 லட்சம் மற்றும் 18 பேருக்கு இரண்டு மற்றும் மூன்றாம் தவணையாக மொத்தம் ரூ. 16.90 லட்சம் என மொத்தம் ரூ.90.90 லட்சம் நிதி உதவிக்கான அரசாணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்

குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.