தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:22 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், மொளசூா் கோவடி கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதி மகன் குமரேஷ் (16). திண்டிவனத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையாா்பாளையம் கடற்கரைக்கு தனது நண்பா்களுடன் சென்றாா். அங்கு நண்பா்களுடன் கடலில் குளித்து கொண்டிருந்தபோது குமரேஷ் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.