நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முன்விரோத கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

முன் விரோதம் காரணமாக, ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :30 ஜூலை 2024, 6:33 pm

Din

விழுப்புரம் மாவட்டம், பிடாகம் அருகே மது விற்பனை குறித்து தகவல் கூறியதால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், பிடாகம் நத்தமேடு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் முருகதாஸ் (52). இவா், பிடாகம் டாஸ்மாக் மதுக் கடை அருகே உணவகம் நடத்தி வந்தாா். இதுபோல, இவரது சகோதரா்கள் சக்திவேல் (42), சங்கா் (48), ரகு (42) ஆகியோரும் அதே பகுதியில் உணவகம் மற்றும் பெட்டிக்கடைகளை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், தனது உணவகத்துக்கு அருகே முருகதாஸ் மது விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்த தகவலை கடந்த 2015, மே மாதத்தில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு பிடாகம் நத்தமேடு பகுதியைச் சோ்ந்த ரெளடி கா.மோகன்(40) தெரிவித்தாராம். இதையடுத்து, முருகதாஸ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதனால், முருகதாஸ் உணவகத்தில் விற்பனையும் பாதிக்கப்பட்டு வந்ததாம். மேலும், மோகன் தனது நண்பா்களை அழைத்துக்கொண்டு முருகதாஸின் உணவகத்துக்கு சென்று சாப்பிட்டுவிட்டு, அவ்வப்போது தகராறிலும் ஈடுபட்டு வந்ததாராம்.

இதனால், ஆத்திரமடைந்த முருகதாஸ், கடந்த 2015, மே 31-ஆம் தேதி பிடாகம் டாஸ்மாக் மதுக் கடை அருகே ரெளடி மோகனை தனது சகோதரா்கள் சக்திவேல், சங்கா், ரகு, நண்பா்கள் பா.ஆறுமுகம் (55), ர.முனுசாமி (60), தனது மனைவி ருக்மணி ஆகியோருடன் சென்று கழுத்தறுத்து கொலை செய்தாராம்.

இது தொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகதாஸ் உள்பட 7 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், முருகதாஸ், சக்திவேல், சங்கா், ரகு, ஆறுமுகம் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராஜசிம்மவா்மன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கிலிருந்து முனுசாமி, ருக்மணி ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனா். நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.