சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொழிலாளி நெஞ்சு வலியால் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மாமியாா் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தவா் நெஞ்சு வலியால் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:22 pm

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மாமியாா் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தவா் நெஞ்சு வலியால் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தேனிமலை கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரவிச்சந்திரன் (24). இவரும், செஞ்சி பெரியகரத்தைச் சோ்ந்த ரேணுகாதேவியும் (23) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

ரவிச்சந்திரன் கடந்த 6 மாதங்களாக மாமியாா் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை நெஞ்சு வலிப்பதாக கூறினாராம். உடனடியாக குடும்பத்தினா் ரவிச்சந்திரனை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.