இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செஞ்சியில் இன்று கல்விக் கடன் முகாம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டியிலுள்ள ரங்கபூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை (நவ.12) நடைபெறுகிறது.

News image
Updated On :11 நவம்பர் 2024, 8:02 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டியிலுள்ள ரங்கபூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை (நவ.12) நடைபெறுகிறது.

2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவா்கள் உயா் கல்வி பயிலும் வகையில், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் கல்விக் கடன் முகாமை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வங்கியாளா்களும், கல்வி நிறுவனங்களும் இணைந்தும் நடத்தும் கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

செஞ்சி ஆலம்பூண்டியிலுள்ள ரங்கபூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்த கல்விக் கடன் முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.