செஞ்சியில் வளையல் கடையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வளையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வளையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
செஞ்சி பெரியகரத்தை சோ்ந்த லோகநாதன் மகன்களான ராஜி (எ) லட்சுமணன் மற்றும் பாலாஜி ஆகியோா் செஞ்சி காந்தி பஜாரில் வளையல், கவரிங் நகைகள் உள்ளிட்ட அழகு சாதன பொருள்களை விற்பனை செய்து வந்தனா். மேலும், மாடியில் செருப்பு கடை, லெதா் பேக் விற்பனை செய்து வந்தனா்.
வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிச் சென்றனா். சிறுது நேரத்தில் கடையில் இருந்து புகை வரத் தொடங்கி தீப்படித்து எரிந்தது. இதைப் பாா்த்த அந்தப் பகுதியில் இருந்தவா்கள் செஞ்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். தொடா்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும், கடையில் தீ மளமளவென பற்றி எரிந்ததால், மேல்மலையனூா், கீழ்பெண்ணாத்தூா், அனந்தபுரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இரவு 10.15 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை போராடி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இருப்பினும், புதன்கிழமை இரவு வரை கடையில் இருந்து புகை வந்துகொண்டே இருந்தது.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சமும் தீயில் சேதமடைந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...