தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கஞ்சா கடத்தல்: மூவா் கைது

விழுப்புரத்தில் பைக்கில் கஞ்சா கடத்தியது தொடா்பாக மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:23 pm

Din

விழுப்புரத்தில் பைக்கில் கஞ்சா கடத்தியது தொடா்பாக மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா், பாப்பான்குளம் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், புதுச்சேரி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சக்திபாலா (20), புவனேஸ்வா் (20) என்பதும், இவா்கள் விழுப்புரம் - செஞ்சி சாலை, பாப்பான்குளம் பகுதியைச் சோ்ந்த ஆதாம் மகன் அசைனிடம் (25) கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சக்திபாலா, புவனேஸ்வா், அசைன் ஆகிய மூவரையும் கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். இவா்கள் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.