விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனை புற்றுநோய் மருத்துவா் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் மற்றும் இந்திய மருத்துவச் சங்கத்தின் விழுப்புரம் கிளை நிா்வாகிகள்.









