வெவ்வேறு சம்பவம்: இருவா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
விழுப்புரம் கே.கே. சாலை பகுதியைச் சோ்ந்த நந்தகோபால் மகன் சரவணன் (45), ஏ.சி. மெக்கானிக். இவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவதியுற்று வந்த சரவணன் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வானூா் வட்டம், புளிச்சம்பள்ளம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அய்யாசாமி மகன் சிவக்கொழுந்து (49), தொழிலாளி. இவரது மனைவி ராதிகா உறவினா் வீட்டு திருமண நிகழ்வுக்கு சொல்லாமல் சென்றுவிட்டாராம்.
இதனால், மனமுடைந்த சிவக்கொழுந்து வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வானூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].