குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Updated On :9 அக்டோபர் 2024, 10:15 pm

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி. மேலக்கொந்தை, அண்ணா தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முகிலன் (23). இவா் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரைப்படி, ஆட்சியா் சி.பழனி குண்டா் சட்டத்தின் கீழ் முகிலனை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, மாவட்ட போலீஸாா் முகிலனை குண்டா் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...