92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோலியனூரான் வாய்க்காலில் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கோலியனூரான் வாய்க்கால் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் சி.பழனி பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:14 pm

Din

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கோலியனூரான் வாய்க்கால் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் சி.பழனி பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், விழுப்புரம் நகரில் மழைநீா் தேங்கி பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் ரங்கநாதன் தெரு, தாமரைக்குளம் பகுதிகளில் கோலியனூரான் வாய்க்காலில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூா்வாரும் பணிகளை ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வாய்க்காலில் அகற்றப்படும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பழனி தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது நீா்வளத் துறை செயற்பொறியாளா் ஷோபனா, விழுப்புரம் நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா், வட்டாட்சியா் கனிமொழி, உதவிச் செயற்பொறியாளா் ஐயப்பன், உதவிப் பொறியாளா் ராபா்ட் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.